திருப்பதி மலைப்பாதையில் இருவேறு சந்தர்ப்பங்களில் அரசு பேருந்தின் அச்சு முறிந்து விபத்து: தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து..!
On two separate occasions on the Tirupati hill roada government bus axle broke and a car crashed into a retaining wall
திருப்பதி திருமலையில் இருந்து 25 பக்தர்களுடன் சென்ற அரசு பேருந்து விபத்துள்ளாகியுள்ளது. நேற்று மாலை திருப்பதி நோக்கி புறப்பட்ட குறித்த அரசு பேருந்து, 57-வது திருப்பத்தை அடைந்தபோது, பஸ்சின் முன்சக்கரத்தின் அச்சு உடைந்த நிலையில், டயர் தனியாக கழலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து தடுமாறி சாலையை விட்டு விலகி சிறிது தூரம் சென்று நின்றுள்ளது.
குறித்த பேருந்தின் வேகம் குறைவாக இருந்ததாலும், டிரைவர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,ம் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை மலைப்பாதை சாலை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் வேறொரு பேருந்து மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை தரிசனம் செய்துவிட்டு காரில் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது குறித்த கார், முதலாவது மலைப்பாதை சாலையில் சென்றபோது, 34-வது திருப்பத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதியுள்ளது.
அத்துடன், அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் மீது மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த ஏர் பலூன்கள் திறந்து கொண்டதால் பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
On two separate occasions on the Tirupati hill roada government bus axle broke and a car crashed into a retaining wall