விவாகரத்து விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: குடும்ப நல நீதிபதி சஸ்பெண்ட்..!
Kollam Family Welfare Judge suspended for sexually harassing a young woman who came for questioning
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இவர் விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட்டுள்ளார்.
இதனால் கேரளா கொல்லம் மாவட்ட நீதிபதியான உதயகுமார் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் செய்தார். இந்தப் புகார் கேரள உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டு, தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுவை அமைத்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அந்த குழு விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட குடும்ப நல நீதிபதி உதயகுமார், கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும், மறு அறிவிப்பு வரும் வரை எந்த நீதித்துறைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி உதயகுமாரை கேரள உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Kollam Family Welfare Judge suspended for sexually harassing a young woman who came for questioning