இந்தியா - கனடா இடையே மீண்டும் மலர்ந்த காதல்: இருநாடுகளுக்கும் தூதர்கள் நியமனம்..! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டுக்கான இந்திய தூதராக1990-ஆம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியான தினேஷ் பட்நாயக்கை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. கனடாவுடன் இந்தியாவின்உறவுகள் சீர்பட்டு வரும் நிலையில், கடந்த 09 மாதங்களுக்கு பிறகு இந்த நியமன நடந்துள்ளது.

கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2022-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி இருந்தார்.இதன்காரணமாக  இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

அத்துடன், கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் குமாரை மத்திய அரசு திரும்ப பெற்ற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இருந்த வரை இந்திய கனடா உறவுகள் சீராக இருக்கவில்லை.

அதனை தொடர்ந்து கனடாவில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாகவும், ஜஸ்டின் ட்ரூடோ திடீர் பதவி விலகல் என்பனவும் முக்கிய காரணமாக இருந்த நிலையில், தற்போது அந்நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற நிலையில் இரு நாட்டு உறவுகள் மீண்டும் சீரடைந்து வருகின்றன.

இந்நிலையிலேயே 09 மாதங்களுக்குபின் கனடாவுக்கான புதிய இந்திய தூதராக தினேஷ்பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல, இந்தியாவுக்கான கனடா தூதரக கிறிஸ்டோபர் கூட்டர் என்பவரை துாதராக நியமித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambassadors appointed again between India and Canada


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->