ஈஸியான ரவா தோசை செய்வது எப்படி?
how to make rava adai
தேவையான பொருட்கள்:-
ரவா
கடலை மாவு
வெங்காயம்
சிவப்பு மிளகாய்
மஞ்சள் தூள்
சோம்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்
புதினா இலைகள்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் ரவாவை 3 முதல் 4 கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின்பு, இதனுடன் கடலை மாவை நன்கு கலக்கவும். தொடர்ந்து, சிவப்பு மிளகாய் மற்றும் சோம்பு சேர்க்கவும்.
இதையடுத்து நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை, உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து தோசை கடாயை சூடாக்கி, அதில் தோசை போல் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா தோசை தயார்.