2025 ஆம்பூர் கலவர வழக்கு: 22 பேருக்கு, 03 தொடக்கம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை..! - Seithipunal
Seithipunal


கடந்த, 2015 ஆண்டு ஜூன், 27-ஆம் தேதி, ஆம்பூரில் நடந்த கலவர வழக்கில் 22 பேருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்களுக்கு 03 ஆண்டு முதல் அதிகபட்சம் 14 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வேலுார் மாவட்டம், ஆம்பூர் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவர் மனைவி பவித்ரா, 25, கடந்த 2015, மே, 24-இல் மாயமானார். அவரை மீட்டு தர பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணையில் ஈடுப்பட்ட, பள்ளிகொண்டா போலீசார், ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது, 26, என்பவரிடம், 2015 ஜூன், 15-இல் இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட, 06 போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

விசாரணைக்கு பின்னர், ஷமீல் அகமது உடல்நிலை பாதித்து உயிரிழந்தார். இதனால் ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனை, 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் உட்பட, 07 பேர் மீது வழக்குப் பதிவு செயப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை அதிருப்தி அளிப்பதாக, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இதனையடுத்து, கடந்த, 2015- ஜூன், 27-ஆம் தேதி, இரவு, 07:00 மணியளவில் ஆம்பூரில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் திரண்டு, போலீசாரை கைது செய்யக்கோரி கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய, 120-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இதன் போது கைதான, 118 பேருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய  ஜாமின் வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று( ஆகஸ்ட் 27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் முன், எஸ்.பி.,க்கள் திருப்பத்துார் சியாமளாதேவி, வேலுார் மயில்வாகனன் தலைமையில், 1,200-க்கும் மேற்பட்ட போலீசார், திருப்பத்துார் மாவட்டத்தில், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் நேற்று காலை முதல் குவிக்கப்பட்டனர். ஆனால் தீர்ப்பை இன்று (28-ஆம் தேதி) ஒத்தி வைப்பதாக நீதிபதி மீனாகுமாரி அறிவித்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் ககுற்றவாளிகள் 22 பேருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு,  மேலும், அவர்களுக்கு குற்றத்திற்கு ஏற்றவாறு 03 ஆண்டு முதல் அதிகபட்சம் 14 ஆண்டு வரை தண்டனை விதித்தும், ரூ.03 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதித்தும் நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22 people sentenced to 3 to 14 years in prison in the 2025 Ambur riot case


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->