07 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவின் படி, 07 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். 

அதன் பிபரங்கள் கீழ்வருமாறு: 

01- பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு சிறப்பு செயலாளர் சஜ்ஜன் சிங் சவான், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

02-தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

03- உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அரசு கூடுதல் செயலாளர் வெங்கட பிரியா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

04- சமூக நலத்துறை இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக சரண்யா அரி நியமிக்கப்பட்டுள்ளார்.

05- தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

06- துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளனர்.

07- துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக ஏற்கனவே இருந்த பானோத் ம்ருகேந்தர் லால், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

07 Tamil Nadu IAS officers transferred


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->