2038-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 02-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: ஈஒய் ஆய்வறிக்கையில் தகவல்..!
India to become worlds 2nd largest economy by 2038 says EY report
2038-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 02-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என சர்வதேச ஆலோசனை ஈஒய் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34.2 டிரில்லியன் டாலர்களாக வரும் 2038க்குள் உயரும் என்றும், இந்தச் சாதனை வரலாற்றைச் சாதனையாக இருக்கும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சாதனை மக்கள் தொகை அதிகரிப்பால் மட்டும் வரவில்லை, வலுவான கட்டமைப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் தான் காரணம் என்றும் ஈஒய் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 2030-ஆம் ஆண்டுக்குள் 20.7 டிரில்லியன் டாலர்களை இந்தியாவின் பொருளாதாரம் எட்டும் எனவும், அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள் இந்திய ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாதிப்பை எளிதில் கட்டுப்படுத்தி விட முடியுமென்றும், இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்த, பல முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் மற்றும் தொலைநோக்குச் சீர்திருத்தங்கள், இந்தியாவை ஒரு நிலையான மற்றும் சக்திவாய்ந்த பொருளாதாரமாக மாற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்தியர்கள் அதிக அளவில் சேமித்து முதலீடு செய்கின்றதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைவதாக குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India to become worlds 2nd largest economy by 2038 says EY report