''நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்'': மம்தா பானர்ஜி சூளுரை..!
Mamata Banerjee says she will not let anyone take away peoples right to vote as long as she is alive
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவின் பேரணி நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 'நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் ஓட்டுரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்,' என்று சூளுரைத்துள்ளார்.
தொடர்ந்து அங்கு பேசிய மம்தா பானர்ஜி. 'நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன், மொழி பயங்கரவாதத்தை, வங்காளிகள் மீது பாஜ கட்டவிழ்த்து விட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார். மேலுணம், பொதுமக்களாகிய நீங்கள், உங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா..? என்பதை நீங்களே சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணையம் மாநில அரசு அதிகாரிகளை மிரட்டுகிறது என்றும், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு, தேர்தல்கள் நடைபெறும்போது மூன்று மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் என்றும், ஆண்டு முழுவதும் இருக்காது என்றும் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், வங்க மொழி இல்லையென்றால், தேசிய கீதமும் தேசிய பாடலும் எந்த மொழியில் எழுதப்பட்டன..? சுதந்திர இந்தியாவில் வங்காளிகள் ஆற்றிய வரலாற்று பங்கை மக்கள் மறக்க வேண்டும் என்று பாஜ விரும்புகிறது என்றும், இந்த மொழியியல் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் மம்தா பானர்ஜி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Mamata Banerjee says she will not let anyone take away peoples right to vote as long as she is alive