இந்திய அணிக்கு புதிய "பிரான்கோ" ஃபிட்னஸ் சோதனை – ஏபி டி வில்லியர்ஸ் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணியாக திகழும் இந்திய அணி, தனது வீரர்கள் எப்போதும் மிகுந்த ஃபிட்னஸுடன் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதற்காகவே பிசிசிஐ (BCCI) வீரர்கள் அனைவரும் யோயோ டெஸ்ட் தேர்ச்சி பெற்றாலே அணியில் இடம் பெறுவார்கள் என்ற கடுமையான நிபந்தனையை விதித்து வந்தது.

இந்நிலையில், தற்போது யோயோ சோதனையைத் தாண்டி, இந்திய அணிக்காக பிரான்கோ டெஸ்ட் என்ற பெயரில் புதிய ஃபிட்னஸ் சோதனையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சோதனையில் ஒரு வீரர் மொத்தம் 1200 மீட்டர் ஓட வேண்டும்.அதற்குள் 20 மீட்டர், 40 மீட்டர், 60 மீட்டர் போன்ற பல்வேறு படிநிலைகளைக் கொண்ட தடைகள் அடங்கும்.இது வீரர்களின் வெடிப்பு வேகம் (Explosive Speed), தொடர்ச்சி சக்தி (Endurance) ஆகியவற்றை அளவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது:“இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்திய பிரான்கோ டெஸ்ட் எங்களுடைய நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. நாங்கள் அதை ஸ்பிரிண்டட் ரிப்பீட்டபிலிட்டி டெஸ்ட் என்று அழைப்போம்.”

“நான் 16 வயதிலிருந்தே அதை செய்து வருகிறேன். ஆனால் உண்மையில் இது உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்தான சோதனை.”“பிரிட்டோரியா யூனிவர்சிட்டி, சூப்பர்ஸ்போர்ட் பார்க் போன்ற இடங்களில் அந்த சோதனையை செய்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் குளிர்காலத்தில், கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். அப்போது இந்த சோதனையைச் செய்வது நுரையீரலை எரிக்கும் அளவுக்கு சிரமத்தை தரும்.”

அவர் இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்களுக்கு பிரான்கோ சோதனை பல்வேறு காயங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும், அதனால் இந்த சோதனையை அறிமுகப்படுத்துவது சரியான முடிவு அல்ல என்றும் மறைமுகமாக எச்சரித்தார்.

இதே கருத்தையே இந்திய அணி மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சோதனை, வீரர்களின் உடல்நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக சில சமயங்களில் காயங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்திருந்தார்.

யோயோ டெஸ்ட் போலவே பிரான்கோ சோதனையும் கட்டாயப்படுத்தப்பட்டால், அது வீரர்களுக்கு மேலும் அழுத்தமாக அமையக்கூடும் என்று ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதே சமயம், இந்திய அணியின் ஃபிட்னஸ் தரத்தை உலக அளவுக்குக் கொண்டுசெல்ல பிசிசிஐ இந்த சோதனையை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Franco fitness test for Indian team AB de Villiers warns


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->