மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை - காரணம் என்ன?
indefinite leave to manonmaniyam sundharanar university
திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம், வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி என்பவரின் மகன் லட்சுமி நாராயணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவரது மகன் ஆகாஷ் என்பவரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இருவரும் வழக்கம் போல் பல்கலைக்கழகத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு வந்தனர். ஆனால், வகுப்பறைக்குள் செல்லாமல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுற்றி வந்துள்ளனர்.
அப்போது அங்கு லட்சுமி நாராயணனுடன் ஒரே வகுப்பில் படித்து வரும் சில மாணவர்கள் வந்து இருசக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்த லட்சுமி நாராயணன் மற்றும் ஆகாஷை தடுத்து நிறுத்தி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படி வாகனத்தில் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கோஷ்டி மோதலாக மாறியது. இந்த மோதலில் இருதரப்பிலும் இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து இருதரப்பு மாணவர்களும் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு மறுதேதி அறிவிக்கும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரு சமூக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
indefinite leave to manonmaniyam sundharanar university