குறைந்த கம்மி விலையில் சொகுசு SUV கார்: டொயோட்டா ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் 48V!
Luxury SUV at a low price Toyota Fortuner Neo Drive 48V
இந்தியாவில் SUV கார்கள் என்றாலே டொயோட்டா ஃபார்ச்சூனர்க்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அரசியல்வாதிகளின் "ஃபேவரிட் கார்" என்ற பெயரை பெற்றுள்ளது. அழகான தோற்றமும், உறுதியான உடலமைப்பும், லக்ஷுரி வசதிகளும் இந்த காரை வித்தியாசமாக்குகின்றன.
இப்போது அதே ஃபார்ச்சூனர் குடும்பத்தில் மிகச் சலுகை விலையில், புதிய நியோ டிரைவ் 48V (Mild Hybrid) ஜூன் 2, 2025 அன்று அறிமுகமானது. ஜூன் 3-வது வாரத்தில் விற்பனை தொடங்கியதும், தேவை எவ்வளவு அதிகமென நிரூபித்துவிட்டது.
1. டி-ஆக்சிலரேஷன் பிரேக்கிங் சிஸ்டம்
இந்த ஹைப்ரிட் SUV-யில் வேகம் குறையும்போது, அதிலிருந்து உருவாகும் சக்தியை பேட்டரி தானாகவே சேமித்து சார்ஜ் ஆகும். எரிபொருள் சிக்கனத்தையும், செயல்திறனையும் அதிகரிக்கும் ஒரு நவீன தொழில்நுட்பம்.
2. சக்திவாய்ந்த இன்ஜின் – சிறந்த மைலேஜ்
2.8 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் என்ஜினுடன் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.
இன்டகிரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர்,லித்தியம் அயன் பேட்டரி இவை சேர்ந்து மென்மையான டிரைவிங் அனுபவம், வேகமான முடுக்கம் மற்றும் சிறந்த மைலேஜ் தருவதாக டொயோட்டா வாக்குறுதி அளிக்கிறது.
3. ஸ்மார்ட் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் & மல்டி டெரெய்ன் சிஸ்டம்
வாகனம் நிற்கும் போதே என்ஜின் தானாக நிற்கும் – எரிபொருள் சேமிப்பு + குறைந்த மாசு.
மேலும் மல்டி-டெரெய்ன் மோட் மூலம் மலைப்பாதை, மணற்பாதை, ஈரமான பாதை என எந்த சாலையிலும் சுலபமாக ஓட்டலாம்.
4. லக்ஷுரி ஸ்மார்ட் அம்சங்கள்
டூயல் டோன் இன்டீரியர்,ஆம்பியன்ட் லைட்டிங்,வயர்லெஸ் சார்ஜிங்,வென்டிலேட்டட் சீட்ஸ்,11 JBL பிரீமியம் ஸ்பீக்கர்கள் (சப் வூஃபர் + ஆம்ப்ளிஃபையர்)இந்த எல்லாம் சேர்ந்து, காரின் லக்ஷுரி உணர்வை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது.
5. 360° கேமரா
பார்க்கிங், நெரிசல் சாலைகள் எதுவாக இருந்தாலும், முழு காட்சியுடன் பாதுகாப்பாக ஓட்டலாம்.எக்ஸ்-ஷோரூம் விலை (ஆரம்பம்): ரூ.44.72 லட்சம்.டெல்லி ஆன்-ரோடு விலை (4×4 டீசல்): ரூ.52.94 லட்சம் (RTO, காப்பீடு உட்பட)மொத்தத்தில், டொயோட்டா ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் 48V – சக்தி, ஸ்டைல், லக்ஷுரி, சிக்கனம் எல்லாமே ஒரே காரில் அடங்கியிருக்கும் ஒரு அதிரடி SUV.
English Summary
Luxury SUV at a low price Toyota Fortuner Neo Drive 48V