சுற்றுலா பயணிகள் இனிமேல் கொடைக்கானல் நகரை பார்க்க முடியாது? - Seithipunal
Seithipunal


மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்த மரங்களையும், பசுமை போர்வை போர்த்திய மலைப்பகுதிகளையும் கொண்ட கொடைக்கானலுக்கு இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தொடர்ந்து சுற்றுலா இடங்களுக்கு செல்லும் போது சோதனை சாவடிகளில் நுழைவு கட்டணம் வசூலிப்பதால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் நகராட்சி அலுவலகம், 7 ரோடு சந்திப்பு, கோக்கர்ஸ்வாக், பசுமை பள்ளத்தாக்கு வழியாக பில்லர்ராக் உள்ளிட்ட வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்பவர்கள் இன்று முதல் ஒரு வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும் என்றும், பின்னர் மீண்டும் அப்சர்வேட்டரி வழியாக நகருக்குள் திரும்ப வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு, கொடைக்கானல் நகர் பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடையும் சூழல் நிலவி வரும் நிலையில், இதனை தவிர்க்க கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக மலைப்பாதையில் நடைபெற்று  வரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists can no longer visit kodaikanal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->