தொடர் விடுமுறை.. கன்னியாகுமரியில் களைகட்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தொடர் விடுமுறை.. கன்னியாகுமரியில் களைகட்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம்.!

பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு, சனி மற்றும் ஞாயிறு என்று தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணமாக இருக்கின்றனர்.

அதன் படி அவர்கள் சூரியன் உதயமாகும் மற்றும் மறையும் காட்சியை பார்த்து ரசிப்பதற்காக காலையிலேயே குவிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகள் இன்று காலையில் இருந்தே  படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

பின்னர், படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். அதேபோல், மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசும் என்பதால், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இவர்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். 

சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

touristers increase in kanniyakumari tourist place for holidays


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->