பவுலிங்கில் ரேணுகா சிங்; பேட்டிங்கில் ஷபாலி வர்மா அசத்தல்; இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி..!
The Indian womens team clinched the T20 series against Sri Lanka
இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையா டிவருகிறது.
முதல் இரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால், டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 07 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 04 விக்கெட்டும், தீப்தி சர்மா 03 விக்கெட்டும் வீழ்த்தினர். 113 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 42 பந்தில் 79 ரன்கள் என அபாரமாக ஆடினார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 13.2 ஓவரில் 02 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியுள்ளது.
English Summary
The Indian womens team clinched the T20 series against Sri Lanka