கிண்டல் செய்யும் விதமாக வீடியோ; 'லலித் மோடி, விஜய் மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள்': வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி..!
The Ministry of External Affairs has confirmed that Lalit Modi and Vijay Mallya will be brought back to India
வாங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டிக்கு தப்பிச்சென்றுள்ளவர்களில் ஒருவரான விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் பண லலித் மோடி, கலந்துகொண்டார். ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தத்தை அடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக ஆவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது அவர் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலை, விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில், 'நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள்' என வீடியோ வெளியிட்டிருந்தனர்.
பொருளாதா குற்றச்சாட்டில் ஈடுபட்ட இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு இணைய தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய அரசு அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாதா என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இருவரையும் இந்தியா கொண்டு வர அரசு உறுதிப் பூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில்; "இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள், இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதில் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்''என்று கூறியுள்ளார்.
குறிப்பாக இந்த இருவரையும் இந்தியா கொண்டு வர, நாங்கள் பல்வேறு அரசுகளுடன் பேசி வருகிறோம் என்றும், அதற்கான செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கிறதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு வழக்குகளில், ஏராளமான வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், நாங்கள் அவர்கள் இந்தியா கொண்டு வர உறுதிப்பூண்டுள்ளோம். ஆகவே, இந்திய நீதிமன்றங்கள் முன் விசாரணையை எதிர்கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.
English Summary
The Ministry of External Affairs has confirmed that Lalit Modi and Vijay Mallya will be brought back to India