சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் சிறையில் உள்ள மலேஷிய முன்னாள் பிரதமர்; மற்றுமொரு நிதி மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal


தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், '1 எம்.டி.பி.,' நிறுவன ஊழல் வழக்கில் குற்றவாளி என, அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

72 வயதான நஜிப் ரசாக் கடந்த 2009 - 2018 வரை மலேசியாவில் பிரதமராக இருந்தவர். தனது பதவி காலத்தில், 1 எம்.டி.பி., எனப்படும், 'ஒரே மலேஷிய மேம்பாட்டு நிறுவனம்' என்ற அரசு நிறுவனத்தை தொடங்கினர். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, மலேஷியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து, 4,900 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தன் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அவர் மீது அதிகார துஷ்பிரயோகம், பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த மோசடி தொடர்பான வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தற்போது முன்னாள் அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, 1 எம்.டி.பி., நிறுவனத்தின் துணை நிறுவனமான, எஸ்.ஆர்.சி., இன்டர்நேஷனலில் இருந்து, 75 கோடி ரூபாயை தன் சொந்த வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக மாற்றிய வழக்கில், 2020-இல் நஜிப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில், அவரது தண்டனை காலம் ஆறு ஆண்டுகளாக குறைந்துள்ள நிலையில், வரும் 2028-இல்  விடுதலையாக இருந்தார்.  தற்போது 1 எம்.டி.பி., நிறுவன வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதற்கான தண்டனை விபரம் இன்னும் வெளியவில்லை. விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Malaysian Prime Minister Najib Razak has been found guilty in a financial fraud case


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->