அமெரிக்காவின் 20 நிறுவனங்கள் மற்றும் 10 உயர் அதிகாரிகளுக்கு தடைவிதித்துள்ள சீனா..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின், 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. சீனா தன நாட்டிற்கு அருகே உள்ள தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை  நீடித்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி, 99,822 கோடி ரூபாய் மதிப்பில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.  இதனால் சீனா ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த 20 நிறுவனங்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன், அந்நிறுவனங்களைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகளுக்கும் தடை விதித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

'தைவான் பிரச்சினையில், ஆத்திரமூட்டும் செயல்களை செய்ய முயற்சிக்கும் எவருக்கும் சீனாவின் உறுதியான பதில் வழங்கப்படும். ஒரே சீனா என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தைவானுக்கு ஆயுதம் வழங்கும் ஆபத்தான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்களில், பெரும்பாலானவை சீனாவுடன் வர்த்தகம் செய்யவில்லை என்பதால்,குறித்த தடை என்பது அமெரிக்காவிற்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China has imposed sanctions on 20 American companies and 10 senior officials


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->