இளைஞர்களே ரெடியா.. நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!
Tomorrow mega employment in tuticorin
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சோந்த வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இம்முகாமில் ஏராளமான தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow mega employment in tuticorin