ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!
Tomorrow holiday for schools and colleges in Ranipet district
தமிழ் கடவுளான முருகனினுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை விழா சீரும் சிறப்புமாக நாளை தமிழக முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருத்தணியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் நாளை தெப்பம் விழா நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்டை மாவட்டமான ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஆடி கிருத்திகையை ஒட்டி நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வேலை நாளாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow holiday for schools and colleges in Ranipet district