இன்று வெளியாகிறது 10 ,11 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.!!
today released 10 and 11 public exam result
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானதால் 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் முடிவுகள் வெளியாகிறது. இந்த முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட இருக்கின்றன.
English Summary
today released 10 and 11 public exam result