பரபரப்பில் திமுக வட்டாரம் - செந்தில் பாலாஜிக்கு சாதகமாக அமையுமா தீர்ப்பு?
today judgment to senthil balaji case
கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். சுமார் ஒருவருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
இதற்கிடையே போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது.
English Summary
today judgment to senthil balaji case