மீண்டும் அதிகரித்த தங்கம் விலை!
Today Gold Price 29 10 2025
தங்கம் விலை கடந்த 17ஆம் தேதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12,200க்கும், ஒரு சவரன் ரூ.97,600க்கும் விற்பனையாகி, விலை உச்சத்துக்கு சென்றது. அடுத்த சில நாட்களில் விலை மாற்றம் வேகமாக நடந்தது — காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் விலை ஏற்றத்தாழ்வுகள் பதிவானது.
ஆனால் 18ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை மெதுவாக சரிவைத் தொடங்கியது. வேகமாக உயர்ந்த விலை, பின்னர் அதே ரீதியில் குறைந்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225 மற்றும் சவரனுக்கு ரூ.1,800 குறைந்தது.
இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,210-ஆகவும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680-ஆகவும் விற்பனையானது. பிற்பகலில் விலை மேலும் உயர்ந்து, சவரனுக்கு ரூ.920 கூடலுடன் ரூ.90,600 ஆகியது. இதனால், ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்தது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
28.10.2025 – ஒரு பவுன் ரூ.88,600
27.10.2025 – ரூ.91,600
26.10.2025 – ரூ.92,000
25.10.2025 – ரூ.92,000
24.10.2025 – ரூ.91,200
English Summary
Today Gold Price 29 10 2025