நாமக்கல் தனியார் கல்லூரியில் 400 மாணவர்கள் மயக்கம், 5 மாணவர்கள் பலியா? உண்மை என்ன? - Seithipunal
Seithipunal


நாமக்கல் தனியார் கல்லூரியில் உணவு உண்ட மாணவர்கள் உயிரிழந்ததாகப் பரவும் தகவல் வதந்தி என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பக்கம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் 27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய இரு நாட்களில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். 

உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும் உணவு தயாரிக்கும் இடம் மற்றும் பொருட்களைச் சீர் செய்து சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது' என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்கள் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே. வதந்தியைப் பரப்பாதீர்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal college student issue TN fackt check


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->