ஹிட் மேன் சாதனை வரிசையில் இணைந்த சூரியகுமார் யாதவ்!
Suryakumar Yadav new record T20 six
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணி பேட்டிங்கிற்கு வந்த சில ஓவர்களிலேயே மழை குறுக்கிட்டது. மழை காரணமாக ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மழை இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி நன்றாக விளையாட 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்தது அப்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அதற்குள் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடன், ஷுப்மன் கில் 37 ரன்களுடன் களத்தில் நின்றனர்.
மழை நீண்ட நேரம் நிற்காததால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் டி20 ஆட்டம் ரத்தாகி கைவிடப்பட்டது.
ஆனால், இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் மொத்தம் 150 சிக்ஸர்கள் விளாசிய சாதனையை பதிவு செய்தார்.
இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் மைல்கல்லை எட்டிய சிலரே உள்ளனர். அதில் சூர்யகுமார் யாதவ் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.
அவர்களின் பட்டியல்:
ரோஹித் சர்மா – 205 சிக்ஸர்கள்
முகமது வசீம் – 187 சிக்ஸர்கள்
மார்ட்டின் கப்டில் – 173 சிக்ஸர்கள்
ஜோஸ் பட்லர் – 172 சிக்ஸர்கள்
சூர்யகுமார் யாதவ் – 150 சிக்ஸர்கள்
English Summary
Suryakumar Yadav new record T20 six