இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு.!
today gold price
பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டு பெண்களுக்கு தான் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அதேபோல் முதலீட்டாளர்களும் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் கடந்த ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி தான்.
அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 4,916 ரூபாய்க்கும், சவரனுக்கு 39,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 4,936 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ஒன்று 68 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 68,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.