சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? - இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

இதையடுத்து கடந்த 13 முதல் 15-ஆம் தேதி வரை ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில், முதல்வர் ஸ்டாலினும் பதில் உரை ஆற்றினார். இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்ய பட உள்ளது. இதனை காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக செய்கிறார். 

பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் சற்று கூடுதலாக இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், பட்ஜெட்டுக்கு என்று ஒரு இலச்சினை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி" என்ற கருப்பொருள் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசு வரலாற்றிலேயே பட்ஜெட்டுக்காக இலச்சினை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today budget presentation in tamilnadu assembly


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->