அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்துங்க.!! தமிழக அரசுக்கு கிடுக்குப்பிடி.!! - Seithipunal
Seithipunal


மருத்துவ ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா செம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரசவத்திற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2019 ஆம் குழந்தை பிறந்த போது சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவருக்கு தையல் சரியாக போடாததால் சில உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில் பிரசவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையால் மிக சிக்கலான பிரச்சனையை மனுதாரர் சந்தித்துள்ளார்.

உரிய நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது தான் இதற்கு காரணம். இதை மத்திய அரசின் மருத்துவ வழிகாட்டுதல் விதிகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டி மனுதாரருக்கு 5 லட்சம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதோடு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் துறை துணை இயக்குனர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அவ்வப்போது தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்த 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அறிவுறுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNHRC has directed TNGovt to conduct surprise inspections in govt hospitals


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->