ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி..!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கான இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்குகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில நியாய விலை கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்  அரிசி கடத்தலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனை எடுத்து அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி "ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நியாய விலை கடை பணியாளர்களை உடனடியாக பணியிட நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் அரிசி கடத்தலில் ஈடுப்படுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தயங்காது" என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt warned employees involved in ration rice smuggling


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->