உங்கள் நிலத்தின் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்! எப்படி? முழுவிவரம் இதோ! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நில அளவை மற்றும் வரித்திட்ட ஆணையரகம் மூலம் https://eservices.tn.gov.in என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பட்டா பெயர் மாற்றத்துக்கும் நேரடியாக இணையவழியில் விண்ணப்பிக்க முடிகிறது.

கிராமப்புறங்களில் உள்ள நில விவரங்களை எளிதாக அறிந்து கொள்வதற்காக "வில்லேஜ் மாஸ்டர்" எனும் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நிலத்தின் சர்வே எண் தெரியாமல் இருந்தாலும், உரிமையாளர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இப்போது, இதை விட மேம்பட்ட புதிய முயற்சியாக, புவியியல் தகவல் அமைப்பு (TN-GIS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://tngis.tn.gov.in என்ற இணையதளத்தில், ஒரே இடத்தில், உரிமையாளரின் பெயர், நில பரப்பளவு, பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ், அரசு மதிப்பு போன்ற தகவல்களுடன், அருகிலுள்ள காவல் நிலையம், மருத்துவமனை, பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்ட அனைத்தும் தெளிவாகக் காணலாம்.

சர்வே எண் இல்லாதவர்களும், மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வதன் மூலம், தங்களுடைய நில விவரங்களை எளிதாக கண்டறியலாம். இந்த சேவைகள் தற்போது மொபைல் செயலியாகவும் (TN-GIS App) கிடைக்கின்றன. சென்னை மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் தகவல்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நகர பகுதிகளும் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNgovt Announce Land Lay Out Online


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->