பாலு மகேந்திரா அவர்கள் பிறந்ததினம்!
It is the birthday of Baalu Mahendra
திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான திரு.பாலு மகேந்திரா அவர்கள் பிறந்ததினம்!.
இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா 1939ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார். இயற்பெயர் மகேந்திரா.
இவருடைய பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
பிறகு 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977-லிலும், தமிழில் அவரது முதல் படமான அழியாத கோலங்கள் 1978-லிலும் வெளியானது.

சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.
சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கிய இவர் தனது 74வது வயதில் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மறைந்தார்.
English Summary
It is the birthday of Baalu Mahendra