நெல்லை சிறுவனுக்கு கத்திக்குத்து... 11-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்... என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் முக ஸ்டாலின் அவர்களே? வானதி சீனிவாசன் கண்டனம்!
bjp vanathi srinivasan condemn to dmk mk stalin govt nellai incident
பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "நெல்லை அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் பகுதியில் 16 வயது சிறுவனை பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
நெல்லை தாமிரபரணிக்கும், இனிப்புகளுக்கும் புகழ்பெற்ற நிலை மாறி இன்று விடியா திமுக அரசில் சாதிய வன்கொடுமைகளும், சிறார் சமூகக் குற்றங்களும் பெருகும் மாவட்டமாக மாறி வருவது வேதனைக்குரியது.
நேற்று முன்தினம் தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள் இன்று அரிவாள் கலாச்சாரம் மாணவர்கள் கையில் வேரூன்றி கொடுங்குற்றங்களைச் செய்ய வைத்திருக்கிறது.
இவ்வளவு குற்றங்கள் அனுதினமும் நடந்து கொண்டிருந்தும் சட்டம் ஒழுங்கினை இரும்புக் கரம் கொண்டு கட்டிக்காக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கையில் கட்சித் துண்டை சுழற்றிக் கொண்டு விளம்பரம் செய்து கொண்டிருப்பதுதான் ஸ்டிக்கர் மாடல் ஆட்சியின் நிஜ முகம்.
மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை, நாம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கனவுடன் ஊர் ஊராகச் சென்று வெற்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக அரசே.. உங்கள் கனவு இனி பலிக்காது.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் குற்றங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் முக ஸ்டாலின் அவர்களே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
bjp vanathi srinivasan condemn to dmk mk stalin govt nellai incident