மயக்க மருந்து கொடுத்து மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்..சக மாணவர்கள் கைது!
Student drugged and gang raped Fellow students arrested
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மருத்துவ மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சக மாணவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், மராட்டிய மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ந்தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருவருடன் இரவு 10 மணியளவில் திரைப்படம் பார்க்க மருத்துவ மாணவி சென்றுள்ளார்.
இந்தநிலையில் திரையரங்கிற்கு செல்வதற்கு முன்பாக அந்த மாணவர்கள் இருவரும் மாணவியை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு மாணவர்களின் மற்றொரு ஆண் நண்பர் ஒருவர் என மூவரும் சேர்ந்து மது அருந்திய நிலையில், மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மயக்கமடைந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவியை இதுபற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மூவரும் மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 2 மாணவர்கள் மற்றும் அவர்களின் நண்பர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ், கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Student drugged and gang raped Fellow students arrested