மீனவ பகுதிகளை மேம்படுத்த ரூ.55 கோடி ஒதுக்கீடு.!!
TNgovt allocate Rs55 crores for fishing areas development
தமிழகத்தில் உள்ள 2 மீனவ பகுதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.55 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை ஒட்டிய மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடற்கரையோரங்களில் பாதுகாப்பு சுவர்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் இருக்கும் தூண்டில் வளைவு மீன் இறங்குதளத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களுக்கும் சேர்த்து தமிழக அரசு ₹55 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
English Summary
TNgovt allocate Rs55 crores for fishing areas development