ஆசிரியர் தகுதி தேர்வில் அதிரடி மாற்றம்! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள் அதிர்ச்சி!
ஆசிரியர் தகுதி தேர்வில் அதிரடி மாற்றம்! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள் அதிர்ச்சி!
ஆசிரியர் தகுதி தேர்வில் அதிரடி மாற்றம்! அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பால், ஆசிரியர்கள் அதிர்ச்சி!
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2 வருடங்களாக நடத்தவில்லை. இந்நிலையில், இது குறித்த அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுதியாக நடந்த தகுதி தேர்வுக்கும் தற்போது நடக்கவிருக்கும் தகுதி தேர்வுக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை. இதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை இனி இருக்காது என தெரிவித்தது. ஆனால், அதற்கு பதில் போட்டி தேர்வு தனியாக நடைபெறும் என்றது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, பின்னர் ஆன்லைன் மூலம் தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பட்டியல் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்த அறிவிப்பால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத இருப்பவர்கள் கடும் கோவம் அடைந்துள்ளனர். ஆன்லைன் தேர்வுக்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஒரு ஆசிரியர் தெரிவிக்கையில், ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் நடத்த அரசு முன்வந்துள்ளது. ஆனால், கிராமப்புற ஆசிரியர்கள் எவ்வாறு இந்த தேர்வை எதிர்கொள்வார்கள். எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் ஆசிரியர்கள் முதன்முறையாக கணினியில் தேர்வு எழுதுவது மிக கடினம். இதனால் அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு, கோரிக்கை வைத்துள்ளனர்.