பாம்பே பன், கிரீம் பன்! தமிழக அரசின் சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி! எங்கே? எப்படி? முழு விவரம்!
TN Govt Bakery Training
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இந்த பயிற்சி கொடுக்கப்படவுள்ளது
செப்டம்பர் 11ம் தேதி முதல், செப்டம்பர் 13ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பயிற்சி நடைபெறுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின்போது பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க் உள்ளிட்டவைகள் செய்ய பயிற்சி வழங்கப்படவுள்ளதாக வெளியான அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.