ஐ.டி நிறுவனங்கள் இயக்கம்..  புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு..!! - Seithipunal
Seithipunal


ஐ.டி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் 10 விழுக்காடு ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தனியார் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்கள் 10 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனால் மக்கள் தங்களின் அன்றாட பணிகளை செய்யவும் இயலாமல், பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில், ஐ.டி நிறுவனங்களுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், ஐ.டி நிறுவனங்களின் பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேவையான ஏற்பாடுகளையும் செய்து இருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு 22 விழுக்காடு பணியாளர்களுடன் பணி செய்ய உத்தரவிடப்பட்டது. 

இந்த சூழ்நிலையில், மீண்டும் கொரோனா சென்னையில் அதிகரித்து வந்தது. இதனால் ஊரடங்கும் கடமையாக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது ஐ.டி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பணியாளர்களுக்கு வந்து செல்லும் வகையில் வாகனங்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகம் தயார் செய்து வழங்க வேண்டும். 

பணியாளர்களுக்குள் முகக்கவசத்துடன் பணி செய்வதை உறுதி செய்தல், சானிடைசர் வைத்து கைகளை சுத்தம் செய்தல் மற்றும் வெப்பத்தை பரிசோதனை செய்தல் போன்றவைக்கு பின்னரே நிறுவனத்திற்குள் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. நோய்க்கான அறிகுறி இருக்கும் நபர்களை நிறுவனத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் ஐ.டி நிறுவனங்கள் இயங்கலாம் என்றும் கூறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Announce IT Company relaxation


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal