விரைவில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் - தமிழக அரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


விரைவில் தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் - தமிழக அரசு தகவல்.!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவில் ஏற்கனவே  சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்படும். 

அதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. போக்குவரத்துத்துறை இணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணத்தை மாற்றியமைக்கும் குழுவில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர், நுகர்வோர் அமைப்பினர் என்று பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

அந்தக் கருத்தின் அடிப்படையில் இன்னும் பன்னிரெண்டு வாரங்களில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும்" என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govertnment iinfo changer auto fare


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->