ஆளுநரின் தேநீர் விருந்து - தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு.!
tn congrass leader avoide governor tea party for independence day
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாளை மறுதினம் கொண்டாடப்படும் சுதந்தர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டு சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tn congrass leader avoide governor tea party for independence day