அதிர்ந்த சட்டப்பேரவை! சிரித்த ஸ்டாலின்! திகைத்து நின்ற அமைச்சர் தியாகராஜன்! அடேங்கப்பா, அப்படி என்னப்பா அந்த அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், இறுதியாக முக்கிய அறிவிப்பாக அமைச்சர் வெளியிட்டது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை.

இந்த அறிவிப்பை அமைச்சர் அறிவிக்கும் போது சுவாரசியமான சம்பவம் அரங்கேறியது. அதன் விவரம் பின்வருமாறு.

அமைச்சர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் : வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

அப்போது அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமைச்சர் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளுக்கு மேஜைக்கு வலிக்காத வகையில் தட்டிய உறுப்பினர்கள் இந்த அறிவிப்புக்கும் மட்டும் சட்டப்பேரவையை அதிரவிட்டு ஆரவாரம் செய்தனர்.

அந்நேரம் சிரித்துக்கொண்டே அமைச்சர் அமைச்சர் தியாகராஜன், "இந்த அறிவிப்பு மட்டும்தான் உங்களுக்கு முக்கியமா? மற்ற அறிவிப்புகள் எல்லாம் வேஸ்ட்டா" என்று கேட்டார். முதல்வர் ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் தனது உரையை தொடங்கிய அமைச்சர், "மத்திய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என்று சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில். தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது" என்றார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly Minister Announce 20 march 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->