திருவண்ணாமலை | மதிய உணவில் பல்லி? 50 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி!
Tiruvannamalai school students vomited after lunch
திருவண்ணாமலை தண்டரை அரசு உயர்நிலைப் பள்ளியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டது.
தண்டரை கிராமத்தில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளியும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பள்ளியும் இயங்கி வருகிறது.
இந்த இரண்டு பள்ளிகளுக்கும் ஒரே சமையல் அறையில் சமையல் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கப்பட்டது.
அந்த உணவில் பல்லி விழுந்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் பள்ளி விழுந்த உணவை சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த மாணவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மாணவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்லி விழுந்த உணவு என்பதால் மாணவர்கள் சிலர் அச்சத்தில் உள்ளனர். சிலருக்கு தொண்டை வலி மேலும் சில உடல் உபாதைகளை மருத்துவரிடம் தெரிவித்து உள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Tiruvannamalai school students vomited after lunch