திருவண்ணாமலை கொடூர விபத்தில் உயிரிழந்த 7 பேர்: கிடைத்த உருக்கமான தகவல்கள்!
Tiruvannamalai accident killed 7 people information found
திருவண்ணாமலை, செங்கம் பகுதியில் திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பெங்களூரு நோக்கி சென்ற காரும் திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த காமராஜ் (வயது 29) கார் ஓட்டுநர் ஆவார்.
இதே போல் விபத்தில் உயிரிழந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நாராயண சேத்தி (வயது 36), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சா ராய் (வயது 24), நிகிலேஷ் (வயது 25), தாலு உள்பட 5 பேரும் ஓசூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிறுவனம் 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதால் 15 தொழிலாளர் மட்டுமே பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் ஆயுத பூஜை முன்னிட்டு நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என விசாரணையில் தெரிய வந்தது.
திருவண்ணாமலை அருகே நடந்த கொடூர விபத்தில் வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tiruvannamalai accident killed 7 people information found