சரக்கு ரெயிலில் தீ விபத்து – கேஸ் சிலிண்டருடன் ஓடி வந்த திமுக அமைச்சர்!
Tiruvallur Railway train fire accident
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில், திருவள்ளூர் ரெயில்நிலையம் அருகே தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. ரெயிலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்துத் தகவலைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “தீ பரவுவதை தடுக்க அனைத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 1 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சராகிய நாசர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தீயணைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் பெற்றார். பாதுகாப்பு காரணமாக அருகிலிருந்த வீடுகளிலிருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன.
இதற்காக மக்களுடன் இணைந்து செயல்பட்ட அமைச்சர் நாசர், சிலிண்டர்கள் எடுக்கும் பணியில் நேரடியாக உதவி செய்ததோடு, அப்பகுதி மக்களுக்கு உணவும் வழங்கினார்.
இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் பரபரப்பும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக இருந்து வருகிறது.
English Summary
Tiruvallur Railway train fire accident