குழந்தைகளின் நலனுக்காக செயல் இழந்த ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Tirupur not used bore well closed collector order
திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் போன்றவை மனிதர்கள், குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவத்துடன் இறப்புக்கு காரணமாக அமைகிறது.
இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ''மாவட்டத்தில் பல பகுதிகளில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகள் மற்றும் கட்டுமான பள்ளங்கள் போன்றவை திறந்தவெளியில் உள்ளன.
இது போன்ற குழிகள் மனிதர்கள், விலங்குகள் குறிப்பாக குழந்தைகள் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக உள்ளது. எனவே பயனின்றி கிடைக்கும் குவாரிகள், திறந்தவெளியில் கிடக்கும் கிணறுகள், செயல் இழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றியம் பகுதிகளில் திறந்தவெளியில் இருக்கும் கிணறுகளுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர் அமைக்கப்படவேண்டும்.
குறிப்பாக செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அதனை மூடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரிகளின் குழிகளை மூடுவதற்கு சம்மந்தப்பட்ட குத்தகைக்காரர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டுமான குழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும்.
அபாயகரமான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tirupur not used bore well closed collector order