திருப்பூர் | இப்படியெல்லாமா போராட்டம் நடத்துவாங்க! நூதன முறையில் போராடும் விவசாயிகள்!
Tirupur Farmers started fighting new way
திருப்பூர், மூலனூரை அடுத்துள்ள பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணையை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாள்தோறும் போராட்டம் நீடிக்கின்ற நிலையில், விவசாயிகள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டத்தை நடத்துகின்றனர்.
முதல் நாள் போராட்டம், கோனேரிப்பட்டி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்தாவது நாள் போராட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராடினர். நேற்று ஆறாவது நாள் போராட்டத்தில் விவசாயிகள் நாய்க்கு தாலி கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று ஏழாவது நாள் போராட்டத்தில் சேலையை அவிழ்க்கும் நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி விவசாயி ஒருவர் சேலை கட்டி, அதனை மற்ற விவசாயிகள் சேர்ந்து அவிழ்த்து அரசின் கவனத்தை திருப்பும் வகையில் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்துகின்றனர்.
விவசாயிகள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tirupur Farmers started fighting new way