குடித்துவிட்டு தகராறு ஏற்பட்டால் சைக்கோவாக மாறும் நண்பன்... பரிதாபமாக உயிரைவிட தோழர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் கல்லூரி சாலையில் இருக்கும் குடியிருப்பில், பனியன் நிறுவன தொழிலாளர்களான இரண்டு பேர் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் வாரம் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டிற்குள் சென்று தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்கையில், அழுகிய நிலையில் ஆணின் சடலம் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பதும், அவருடன் மதுரையை சேர்ந்த சங்கர் என்பவர் தங்கியிருந்த நிலையில், அவர் மாயமாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சங்கரை தொடர்பு கொள்ள முயற்சி செய்கையில், மற்றொரு வழக்கு தொடர்பாக அனுப்பார்பாளையம் காவல் நிலையத்தில் சங்கர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் விசாரணைக்கு பின்னர் கோவை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதன் பின்னர், சங்கரை நீதிமன்ற காவலில் விசாரணைக்கு எடுத்ததில், " கடந்த 2018 ஆம் வருடம் தன்னுடன் தங்கியிருந்த நண்பருடன் ஏற்பட்ட தகராறில், அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும், பின்னர் அறையில் வாரக்கணக்கில் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. 

இதனைப்போன்றே பாக்கியம் அன்பரசு என்பவரை சங்கர் கொலை செய்துள்ளதும், குடிபோதையில் தகராறு ஏற்படும் பட்சத்தில், தலையில் கல்லை போட்டு கொலை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மூன்றாவது கொலையும் அதே பாணியில் அரங்கேறிய நிலையில், இசக்கிமுத்து பலியாகியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Murder Police Arrest Culprit Sankar 29 November 2020


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal