நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவு - கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி!
Tirunelveli Mayor Election result 2024
மொத்தம் 55 வார்டுகளை கொண்ட நெல்லை மாநகராட்சியில், தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேரும், திமுகவின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் என 51 கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.
இந்த நிலையில், சொந்த கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்ல், நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க இன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் போட்டி வேட்பாளராக ஒருவரும் களமிறங்கினர்.
இன்று காலை 11 மணி அள்வில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலின் முடிவில் 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், 30 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார்.
English Summary
Tirunelveli Mayor Election result 2024