பகட்டான ஆடையுடன் சுற்றும் கல்யாண புரோக்கருக்கு நாமம் போட்ட பலே கும்பல்... புரோக்கர்களே உஷார்.!
Tirunelveli broker Robbery by Gang Police Investigation
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75). இவர் திருமணம் மற்றும் நிலம் சம்பந்தமான புரோக்கராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் மூன்று பேர் கொண்ட கும்பல், கந்தசாமியின் வீட்டிற்கு வந்து கன்னியாகுமரியில் உள்ள அஞ்சுகிராமத்தில் உள்ள பெண்ணை வரன் பார்த்து முடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து பகட்டான ஆடை மற்றும் தங்க ஆபரணங்களை அணிந்து புறப்பட்ட கந்தசாமி, பெண் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் பெண்ணை பார்த்த குடும்பத்தினர், பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதன்பின்னர், மறுநாள் தொடர்பு கொண்ட அந்த கும்பல், அங்குள்ள காவல் கிணறு பகுதியில் பெண் இருப்பதாக கந்தசாமியை அழைத்துள்ளனர். இதனை நம்பிய கந்தசாமியும் நகைகளுடன் விரைந்து புறப்பட்ட நிலையில், காரில் ஏற்றிய கும்பல் சிறிது தூரம் சென்றதும் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துள்ளது.

பின்னர், ஆரல்வாய்மொழி பகுதியில் ஓடும் காரிலிருந்து முட்புதரில் தள்ளிவிட்டு சென்றுள்ளது. மறுநாள் காலையில் முதியவரை கண்ட பொதுமக்கள், ஆரல்வாயமொழி காவல் துறையினரின் உதவியுடன் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் பெண்வீட்டார் போல போலியாக நடித்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளைக்கும்பலை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirunelveli broker Robbery by Gang Police Investigation