திருத்தணி : உறவினர் வீட்டிற்குச் சென்ற போது சோகம் - குட்டையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு.!
three womans died drowned water in tiruthani
திருத்தணி : உறவினர் வீட்டிற்குச் சென்ற போது சோகம் - குட்டையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மல்லிகா, ஹேமலதா மற்றும் கோமதி. இவர்கள் மூன்று பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் அருகிலுள்ள பயன்பாடு இல்லாத கல்குவாரி பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பாததால் உறவினர்கள் அவர்களைத் தேடித் சென்றனர்.

அங்கு அவர்கள் மூன்று பேரும் கல்குவாரியின் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரின் உடலையும் மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three womans died drowned water in tiruthani