தென்காசி அருகே வாலிபர் கொலை - பிரேத பரிசோதனையில் சிக்கிய பெற்றோர்.!
three peoples arrested for murder case in tenkasi
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருகே வல்லம் கிறிஸ்டியன் காலனி தெருவைச் சோ்ந்தவர்கள் முகைதீன் அப்துல்காதா்- செய்யது அலி பாத்திமா தம்பதியினர். இவர்களுடைய மகன் முகம்மது சித்திக்.
வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருந்து வந்த இவா், கடந்த 5ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மாமா திவான் அலி, குற்றாலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி, தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சித்திக்கின் தாய் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதற்கிடையே சித்திக்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்திக்கின் கழுத்தில் காயம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், சித்திக்கின் தாய் தனது மகன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரத்தில் அவரது வாயை மூடி, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு தனது கணவர் மற்றும் சகோதரர் உடைந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் மூன்று போரையும் கைது செய்தனர். பெற்றோர்களே தனது மகனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples arrested for murder case in tenkasi