காசி யாத்திரைக்கு சென்றவர்களை பத்திரமாக மீட்க வேண்டும்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


காசி யாத்திரைக்கு சென்ற புதுச்சேரி பக்தர்களை புதுச்சேரி அரசு பத்திரமாக மீட்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:புதுச்சேரியிலிருந்து காசி யாத்திரை சென்ற பயணிகளை வாகனத்திற்கான பரிமிட் இல்லை என்று கூறி ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக செய்தி வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் முதல்வர் ரங்சாமி அவர்களை தொடர்பு கொண்டு, ராஜஸ்தான் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ள புதுச்சேரி பக்தர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மேலும், அவர்களை விடுவிக்க காலதாமதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பக்தர்களின் உறவினர்கள் இங்குள்ள ராஜஸ்தான் வாகனங்களை சிறைபிடிப்பில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் சட்டம்–ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகும். ஆகவே, விரைவாக ராஜஸ்தான் அரசிடம் பேசி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோரையும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடர்பு கொண்டு, காசி யாத்திரைக்கு சென்ற பயணிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தினார்.

இதனிடையே ராஜஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 10 பக்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் அத்தொகுதி திமுக பொறுப்பாளர், திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் அவர்கள் தமது சொந்த நிதியில் இருந்து ரூ. 60 ஆயிரத்தை ராஜஸ்தானில் உள்ளவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those who went on the Kashi pilgrimage should be rescued safely Leader of the Opposition Siva


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->